கடந்த சில நாள்களாக
காலை நடையில்
நான்ஸியைப் போலவே
அவளது முதிய பதிப்பாய்
ஒருத்தி
சற்றே இடதுபுறம் சரிந்து
என்னைக் கடக்கிறாள்.
இன்று காலையில்
நான்ஸியைப் போலவே
அவளது இளையபதிப்பொன்று
சற்று வாளிப்பாய்
இரண்டு சக்கரவண்டியில்
கடந்து போனாள்.
அசல் நான்ஸியைப் பார்த்து
வருஷங்கள் ஓடிவிட்டன.
ஆனால்
வேறு வேறு
நான்ஸிகளின் சாயல்கள்
ஏன்
இந்தக் கடற்கரை சாலையில்.
(நன்றி: அகழ் இணை இதழ்)
Comments