Skip to main content

கிளிக்குஞ்சு - ஈயூனிஸ் டி சௌஸா


தானியப் பெட்டியில் உள்ள

குஞ்சுக்கிளி

வேண்டாதவளைப் பார்ப்பது போல

என்னை உறுத்துப் பார்க்கிறது

தானியங்களை

உனக்கு அளிப்பது யார் தெரியுமா

குட்டிப்பையா?

குஞ்சுக் கிளியிடமிருந்து பதிலே இல்லை.

அது இன்னமும் ஆங்கிலம் பழகவில்லை.

நான் இன்னும் கிளி பழகவில்லை.

Comments