நிலவினடியில் அந்தக் குதிரைகளை
நான் நினைவுபடுத்தியபடி இருக்கிறேன்
அந்தக் குதிரைகளுக்கு சீனியைத் தீனியாக
தந்ததையும்
நீள்சதுர வடிவங்களில் சீனி
கிட்டத்தட்ட ஐஸ் போலத் தோற்றமளிப்பது
மற்றும்
குதிரைகளின் தலைகள் கழுகுகளைப் போன்றது
கடிக்க முடியக்கூடிய வழுக்கைத் தலைகள்
ஆனால் கடிக்கவில்லை.
குதிரைகள் எனது தந்தையைவிட நிஜமானவை
குதிரைகள் கடவுளைவிட மிக நிஜமானவை
அவை என்னைத் தாக்கியிருக்கலாம்
ஆனால் அவை அப்படி நடந்துகொள்ளவில்லை
எல்லாவிதமான பயங்கரங்களையும் அவை புரிந்திருக்கலாம்
ஆனால் அவை அப்படி நடந்துகொள்ளவில்லை.
எனக்குக் கிட்டத்தட்ட ஐந்து வயது ஆகியிருந்தது
ஆனால் என்னால் மறக்கவே முடியவில்லை
எத்துணை பலமானவை அந்தக் குதிரைகள்
எத்துணை குணம்கொண்டவை அந்தக் குதிரைகள்
அவற்றின் ஆன்மாக்களிலிருந்து
எச்சில் வடியும் அந்தச் சிவப்பு நாக்குகள்.
Comments