Skip to main content

லீலை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி



வில்டன் அவென்யுவுக்குச் சென்றுகொண்டிருந்த போது

இரண்டு கைகள் கவ்வியிருப்பது போல

இறுக்கமாக நீல ஜீன்ஸ் அணிந்த

15 வயது யுவதி

சாலையில் எனது காரின் முன்பு தோன்றினாள்

அவள் சாலையைக் கடப்பதற்காக நிறுத்தினேன்

எனது கார் கண்ணாடி வழியாக 

தனது செவ்வூதாக் கண்களால்

நேரடியாகக் கூர்ந்து பார்த்தாள்

அத்துடன்

நான் இதுவரை பார்த்திராத அளவில் 

மிகப்பெரிய

ரோஜாநிற குமிழை

பப்பிள் கம்மிலிருந்து ஊதி 

வாயிலிருந்து வெளியிட்டாள்

நான் கார் வானொலியில்

பீத்தோவனைக் கேட்டுக் கொண்டிருந்தேன்

அத்துடன் போய்விட்டாள்

நானும் பீத்தோவனுடன்

விடப்பட்டேன். 

Comments