கோடையின் பெண்கள் ரோஜாவைப் போலவும்
பொய்யைப் போலவும் மரிப்பார்கள்
கோடை பெண்களின் நேசம்
இப்போதில்லா விட்டால் எப்போதென்பதைப் போல
நெடிதாக இருக்கும்
கோடையின் பெண்கள்
யாரையும் காதலிக்கக்கூடும்
உங்களையும்
கோடை எப்போது முடிவடைகிறதோ
அதுவரை
அவர்களிடமும் குளிர்காலம் வருகிறது
வெண்பனி மற்றும் உறைய வைக்கும் காற்று
மற்றும்
மரணம் கூட முகத்தைத் திருப்பும்
அசிங்க முகங்கள்
-அச்சோ -
அவர்களை எடுத்துக் கொள்வதற்கு
முன்னால்.
Comments