எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்.
அவை வரையறைக்குட்பட்டவை
அவற்றுக்கு வித்தியாசமான தேவைகள்
மற்றும் கவலைகள்.
ஆனால் நான் வேடிக்கை பார்க்கவும்
அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ளவும் செய்கிறேன்.
அவற்றுக்குத் தெரிந்த சொற்பத்தை
நான் விரும்புகிறேன்
அது மிக அதிகம்.
அவை புகார் செய்கின்றன ஆனால்
கவலைப்படுவதில்லை.
ஆச்சரியமான கம்பீரத்துடன் அவை நடக்கின்றன.
மனிதர்களால் புரிந்துகொள்ளவே முடியாத வகையில்
அவை அப்பட்டமான எளிமையுடன் உறங்குகின்றன.
நமது கண்களைவிட
அவற்றின் கண்கள் கூடுதல் அழகுடையவை.
ஒரு நாளில்
20 மணிநேரங்கள்
தயக்கமோ குற்றவுணர்வோ இன்றி
அவற்றால் தூங்கமுடியும்.
நான் மிகவும் சோர்வாக உணர்கையில்
நான் செய்வதெல்லாம்
எனது பூனைகளைக் கவனிப்பேன்
எனது தைரியம்
திரும்பிவிடும்.
நான் இந்தப் பிராணிகளை
அவதானிக்கிறேன்.
அவை என்னுடைய
ஆசிரியர்கள்.
Comments