Skip to main content

ஜேனுக்கு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


புல்லுக்குக் கீழே

225 நாட்கள்

என்னைவிடவும் உனக்குக் கூடுதலாகத் தெரியும்

உனது ரத்தத்தை எடுக்கப் போதுமான அளவு.

நீ ஒரு உபயோகமும் இல்லாதவள்

இப்படித்தான் இது நடக்கவேண்டுமா?

இந்த அறையில்

பல மணிநேரங்கள் நேசக்கூடலில் 

நிழல்கள் உருவாகின்றன இன்னும்.

நீ நீங்கியபோது

கிட்டத்தட்ட

எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டாய். 

இரவுகளில் நான் புலிகளின் முன்னர்

மண்டியிடுகிறேன்

அவை என்னை இப்படி இருக்கவிடப் போவதில்லை.

நீ எப்படி இருந்தாயோ

அது திரும்பவும் நிகழப் போவதேயில்லை.

அந்தப் புலிகள் என்னைக் கண்டுபிடித்துவிட்டன

அதைப் பற்றி நான் கவலையே கொள்ளப் போவதில்லை.

Comments