நாங்கள் சேர்ந்து குடித்துக் கழித்த நாட்களை
திரைக்கதையாக எழுதுவேனென்றும்
அது திரைப்படமாகத் தயாரிக்கப்படுமென்றும்
அவளது பாத்திரம்
அழகிய சினிமா நட்சத்திரத்தால்
நடிக்கப்பட்டிருக்குமென்றும்
31 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன
ஜேன் கற்பனைகூட செய்திருக்கமாட்டாள்
“அழகிய சினிமா நட்சத்திரமா? அப்படியா, நாசமாய் போச்சு"
என்று ஜேன் சொல்வது இப்போது கேட்கிறது.
அது கேளிக்கைத் தொழில் ஜேன்
அதனால் இனியவளே
நீ போய் உறங்கு
ஏனெனில் எத்தனை கடினமாக
முயற்சி செய்தாலும் உன்னைப் போல
அச்சு அசலான ஒருவளை
அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
அத்துடன் என்னையும்.
(பார்ஃப்ளை - சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 1987-ல் வெளியான ஹாலிவுட் திரைப்படத்தின் பெயர்)
Comments