நரகத்திலிருக்கும் சாத்தான்கள் குறித்து எண்ணிப்பார்க்கிறேன்
கோபத்துடன் விளக்கின் குமிழை
அழுத்தி
அணைத்தபடியும் எரிவித்தபடியும் இருப்பதைப்
பார்த்துக் கொண்டே
பூக்கள் நிறைந்த அழகிய மலர்குடுவையை வெறித்துப் பார்க்கிறேன்.
எங்களுக்குள் வார்த்தைகள் முற்றிப்போயிருந்தன.
நான் இங்கே உட்கார்ந்து
இந்தியாவிலிருந்து வந்த சிகரெட்களைப் புகைத்துக் கொண்டிருக்கிறேன்
வானொலியில் ஒலிக்கும் ஓபரா பாடகியின் பிரார்த்தனைகள்
என்னுடைய மொழியில் இல்லை.
வெளியே, எனக்கு இடப்புறம் உள்ள ஜன்னல்
நகரத்தின் இரவு விளக்குகளைக் காண்பிக்கிறது
இந்த எளியதொரு பயங்கரத்தைத் தகர்த்து
விஷயங்களை மீண்டும் சீராக்கும் தைரியத்தை
நான் வேண்டுகிறேன்
ஆனால் எனது அல்பக் கோபம்
என்னைத் தடுக்கிறது.
இந்த சிகரெட்களைப் புகைத்தபடியே
நரகம் என்பது நாம் உருவாக்குவது
என்பதை நான் உணர்கிறேன்.
இங்கே ஊகங்களைச் செய்துகொண்டு
நான் காத்திருக்கும் வேளையில்
அவள் உட்கார்ந்தபடி
விளக்கின் குமிழை அழுத்தி
எரிவிப்பதும் அணைப்பதுமாக இருக்கிறாள்
எரிவது மற்றும் அணைவது.
Comments