நீ முயற்சிக்கப் போகிறாய் என்றால்
அந்தம் வரை செல்.
இல்லையெனில், முயற்சியைத் தொடங்கக்கூட வேண்டாம்.
தோழியரை
மனைவியரை
உறவினர்களை
உனது மனத்தைக் கூட இழந்துபோக நேரிடலாம்.
மூன்று அல்லது நான்கு நாட்கள் பட்டினியிருக்கலாம்
பூங்காவின் பெஞ்சில் உறையும் குளிரில் கிடக்க வேண்டியிருக்கலாம்.
சிறையாக இருக்கலாம்.
கண்டனத்துக்கு இலக்காக ஆகலாம்.
நகைப்புக்குரிய- தனிமைப்படுத்தலாக ஆகலாம்.
தனிமைப்படுத்தல் என்பது பரிசு.
உன் முயற்சியில் எவ்வளவு திடத்தோடு இருக்கிறாயென்று
சோதிக்க வருபவைதான் அவை எல்லாமும்
புறக்கணிப்பையும் மோசமான சங்கடங்களையும் தாண்டி
நீ முயற்சியைத் தொடர்ந்தால்
உன்னால் கற்பனை செய்ய முடிவதைத் தாண்டியும்
அதுவே
மற்ற எல்லாவற்றையும் விடச் சிறந்தது.
நீ முயற்சி செய்யப் போகிறாய் என்றால், அந்தம் வரை செல்.
அதுபோன்ற உணர்வு வேறொன்று இல்லை.
நீ கடவுளர்களுடன் தனியாக இருப்பாய், இரவுகள் நெருப்பில்
சுடர்ந்துகொண்டிருக்கும்
வாழ்க்கையில் ஏறி பூரண எக்களிப்பை நோக்கிச் சவாரி செல்வாய்
வலுத்த போராட்டத்தால் மட்டுமே அடையக்கூடிய இடம் அது.
Comments