உயிரைக் கொடுப்பதற்கு உயிரை எடுக்க வேண்டும்
நூறு கோடி அனுபவங்களைக் கொண்ட கடலின் மீது
நமது துயரம் தட்டையாகவும் உள்ளீடற்றதாகவும்
விழும்போது
வெள்ளைக் கால்கள், வெள்ளை வயிற்றைக்கொண்ட
உயிரினங்கள் அழுகி விளிம்பிட்ட
கடலிடைத் திட்டுகளைக் கடக்கிறேன்
சூழ்ந்திருக்கும் காட்சிகளுக்கு எதிராக கலவரத்தை நிகழ்த்தியபடி
அவை நெடியதாக இறந்துகிடக்கின்றன.
எனதருமைக் குழந்தையே
அந்தக் குருவி உனக்கு என்ன செய்ததோ
அதைத்தான் உனக்கு நான் செய்தேன்
இளமையாய் இருப்பது மோஸ்தராக இருக்கும்வேளையில்
நான் முதுமையில் இருக்கிறேன்.
சிரிப்பது மோஸ்தராக இருக்கும்வேளையில்
நான் அழுகிறேன்.
நேசிப்பதற்கு குறைந்த தைரியமே தேவையாக இருக்கும்நிலையில்
நான் உன்னை வெறுத்தேன்.
Comments