Skip to main content

அந்தத் தாதியர்கள்- சார்லஸ் புக்கோவ்ஸ்கி


நான் போகும் அந்த மருத்துவமனையில்

தாதியர்கள்

கூடுதல் எடையுள்ளவர்களாக எனக்குத் தோன்றுகின்றனர்.

அவர்கள் தங்கள் வெள்ளை உடைகளில் தடிமனாக இருக்கிறார்கள்

இடுப்புக்கும மேல்

கீழேயும்

பிருஷ்டங்களிலிருந்து

கால்கள் வரையும்.


அவர்கள் எல்லாரும் 47 வயதினராய் தெரிகின்றனர்

கால்களை அகற்றி நடக்கின்றனர்.


அவர்கள் தங்கள் தொழிலிலிருந்து தொலைவில் உள்ளவர்களாகத்

தெரிகின்றனர்.

அவர்கள் தங்கள் கடமைகளுக்குச் செவிகொடுக்கின்றனர்

ஆனால்

தொடர்பின்றி.

அவர்களை நான் நடைபாதைகளிலும்

நீளத் தாழ்வாரங்களிலும் அவர்களைக் கடக்கிறேன்.

அவர்கள் ஒருபோதும் எனது கண்களைப் பார்ப்பதில்லை.


அவர்களது கனத்த ஷூ நடையை மன்னிக்கிறேன்

ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களுக்கும் இடையில்

அது ஒரு இடைவெளியை உருவாக்குகிறது.


இந்தப் பெண்கள் கூடுதலாக இரை உண்டவர்கள்

அவர்கள் கூடுதலாக

மரணத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

Comments