Skip to main content

ஏகாந்தம் என்று மொழிபெயர்க்கிறேன்


ஆம்

தனது விருந்தை

தனது இணையை

தனது மணத்தை

வாயைத் திறந்து

காற்றில் முகம்தூக்கி

சுகிக்கிறது

ப்ரௌனி

எனக்கு அங்கிருக்கும்

அதன் உருவம் புலப்படவில்லை

ஏகாந்தம் என்று அதை

நான் தயங்கித் தயங்கி

என் உலகின் அர்த்தத்தில் மொழிபெயர்க்கிறேன்

மாடு தொழுவத்தில் சிரிப்பதை எழுதுகிறார்

ந. முத்துசாமி

நாய் சிரிக்கும் என்கிறார்

அ. மார்க்ஸ்.

Comments