தாமதமாகவே
இந்த எண்ணத்துக்கு வந்தடைந்தேன்
இந்த நாடு
நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு
பின்னர் சென்றுவிட்டது
அத்துடன் அனைத்து சமூக முன்னேற்றமும்
நபருக்கும் நபருக்குமான நல்லுணர்வும்
அடித்துச் செல்லப்பட்டுவிட்டது
அதோடு
அங்கே பழைய சகிப்பின்மைகள்
இடம்பெயர்ந்துவிட்டன.
எப்போதும் இல்லாத அளவில்
அதிகாரத்துக்கான
சுயநல வேட்கைகள்
நம்மிடம் உள்ளன
பலவீனர்கள்
வறியவர்கள்
நாதியற்றவர்கள்
முதியவர்கள் மீது
மதிப்பின்மையையும்
கொண்டுள்ளோம்
அன்பை போராலும்
விடுதலையை
அடிமைத்தனத்தாலும்
இடம்பெயர்த்துவருகிறோம்.
நாம் அடைந்த பலன்களை
வீணடித்திருக்கிறோம்
தொடர்ந்து
நாம் சிறுத்து வருகிறோம்.
நமது வெடிகுண்டு நம்மிடம் உள்ளது
அதுதான் நமது அச்சம்
நமது சாபம்
மற்றும்
நமது அவமானம்.
நம்மையெல்லாம் பிடித்திருந்த
மூச்சு நீங்கிக்கொண்டிருப்பதுதான்
தற்போதைய பெரும் சோகம்
அத்துடன்
நம்மால் அழக்கூட இயலாது.
Comments