Skip to main content

பின்அந்தியில் சோர்வு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


நூற்றாண்டுகளுக்கு

முந்தைய குழலிசை எனது கருப்பு ரேடியோ வழியாக

இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது 

வாடகைக்கு வாங்கிய வீடியோப் படத்தை

கீழ்தளத்தில் எனது மனைவி விசிஆரில் பார்த்துக் கொண்டிருக்கும்போது

சிகரெட்டைப் புகைத்துக்கொண்டே

சுவரில் அறையப்பட்டு இறந்துபோன கொசுவை

குறித்துக்கொள்வது.


நித்திய யுத்தம் ஒருகணம் கைவிடப்படும்

வெளிகளுக்கு இடையிலான வெளி இது

பொருட்டே இல்லாத வருடங்களைப் பொருட்படுத்தும்

இடம் இது:

சண்டை தேய்ந்து வருகிறது

ஆனால், நூற்றாண்டுகளின் ஓசை

என் உடல்வழியாக புகுந்தோடும் இந்த அந்தியில்

அமைதியாக ஓய்வெடுப்பதைப் போல

அவ்வப்போது சுவாரசியமாகவும் உள்ளது...

இந்த

கிழ நாய்

நிழலிடத்தில் அமைதியாகப் படுத்திருக்கிறது

ஆனால் 

தயார் நிலையில்.

Comments