நீல மீன், நீல இரவு, ஒரு நீலக் கத்தி
எல்லாம் நீலமாக இருக்கிறது
என்னுடைய பூனைகளும் நீலநிறத்தில்
நீல ரோமம்
நீல நகங்கள்
நீல மீசைகள்
நீலக் கண்கள்.
எனது படுக்கை விளக்கு
நீலமாய் ஒளிர்கிறது.
உள்ளே, எனது நீல இதயம் நீல ரத்தத்தை
இறைக்கிறது
எனது விரல் நகங்கள், கால் நகங்கள்
நீலம்
அத்துடன் எனது படுக்கையைச் சுற்றி
நீல ஆவி மிதக்கிறது
எனது வாய்க்குள் இருக்கும் ருசியும்
நீலம்
அத்துடன் நான் தனியாக
இறந்துகொண்டிருக்கிறேன்
அத்துடன்
நீலமாக.
Comments