உனது உயிரை திருடனைப் போலப் பறித்துச் செல்வதற்காக ஜன்னல் திரையினூடாக ஊர்ந்து வரும் வைகறைக்கு நீ காத்திருக்கும் போது - சார்லஸ் புக்கோவ்ஸ்கி
பாம்பு வளைக்குள் மறைந்திருந்தது
அப்போது
உன்னைப் பற்றிச் சொல்
என்றாள் அவள்.
வேறொரு உலகின்
குறுகிய முடுக்கில்
வெகு காலத்துக்கு முன்னர்
நையப் புடைத்தெடுக்கப்பட்டவன்
என்றேன்
நான்.
அவளும் சொன்னாள்.
ஏதோவொரு சந்துக்கு
அடித்துத் துரத்தப்பட்ட பன்றிகள்
நாம் எல்லாம்,
நமது புல் மூளைகள்
வெட்டுக்கத்தியை நோக்கிப் பாடுகின்றன.
அதிசயம்,
நீ வித்தியாசமானவளாக
இருப்பது
நான் சொன்னேன்.
நாங்கள் அங்கே அமர்ந்து
சிகரெட்களைப்
புகைத்துக் கொண்டிருந்தோம்
காலை
ஐந்து மணிக்கு.
Comments
கத்தியை நோக்கிப் பாடுகின்றன.😍