அவர்கள் இளம் யுவதிகள்
அவர்கள் தெருக்களில் நின்று
ஆட்களை அழைப்பார்கள்
ஆனால் பெரும்பாலான நாட்களில்
வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத நிலையில்
எனது விடுதி அறைக்கு
வந்து சேர்வார்கள்
அவர்களில் மூன்று நான்கு பேர்கள்
வைனை உறிஞ்சியபடி
முகத்தின் மேல் கூந்தல் படிய
காலுறைகளுடன் ஓடியபடி
வசைகளோடு கதைகள் சொல்வார்கள்
எப்படியோ
அவை
அமைதி நிறைந்த இரவுகளாய் இருந்தன
அவர்களோ
வெகுகாலத்துக்கு முன்னால்
நான் சிறுவனாய் இருந்தபோது
எனது பாட்டி வளர்த்த
கானரி குருவிகளை எனக்கு நினைவூட்டினார்கள்
அவை
தீனி விதைகளில்
எச்சம் போடும்
அத்துடன்
தங்களது குடிநீரிலும்
அந்தக் குருவிகளோ அழகானவையாகவும்
இருந்தன
அவை சலசலத்தன
ஆனால் அந்தக் குருவிகள்
பாடியதேயில்லை.
Comments