சாம்பல் நிற டிரக்கில்
ரேடியோவை ஒலிக்கவிட்டு
இந்த இளைஞர்கள்
இங்கே வருகின்றனர்
அவர்கள் அவசரத்தில் இருக்கின்றனர்
கிளர்ச்சியாக இருக்கிறது:
சட்டை திறந்து
தொப்பைகள் வெளியே குலுங்க
குப்பைத் தொட்டிகளைக் காலி செய்கின்றனர்
உருட்டி எடுத்து கவை தூக்கியில் பொருத்துகின்றனர்
தொட்டியைத் தூக்கிக் கவிழ்த்து குப்பையை
அதீத இரைச்சலுடன் அரைக்கிறது டிரக்
இந்த வேலைகளுக்காக
அவர்கள் விண்ணப்பப் படிவங்களை நிரப்பியிருந்திருக்க
வேண்டும்
அவர்கள் வீடுகளுக்கு வாடகை கொடுக்கிறார்கள்
பழைய மாடல் கார்களை ஓட்டுகிறார்கள்
சனிக்கிழமை இரவு குடிக்கிறார்கள்
தற்போது லாஸ் ஏஞ்சல்ஸின் வெயிலில்
தங்கள் குப்பைத் தொட்டிகளுடன்
அங்குமிங்கும் அலைகிறார்கள்
இந்தக் குப்பை அனைத்தும் எங்கேயோ போகின்றன
அத்துடன்
அவர்கள் ஒருவருக்கொருவரை சத்தமாக அழைத்துக் கொள்கின்றனர்
பின்னர் டிரக்கில் சேர்ந்தேறி
கடலை நோக்கி மேற்கு திசையில் பயணிக்கின்றனர்
நான் உயிருடன் இருக்கிறேன்
என்று அவர்களில் ஒருவருக்கும் தெரியாது
ரெக்ஸ் டிஸ்போஸல் அன் கோ.
Comments