Skip to main content

போட்டி தொடர்பில் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


எவ்வளவு உயரம் ஏறுகிறீர்களோ

அவ்வளவு பெரியது அழுத்தம்


மேலுக்கும் கீழுக்கும் இடையில் உள்ள தொலைவு

ஆபாசமான மகத்துவம்

என்பதை

அந்த அழுத்தத்தைத் தாக்குப்பிடித்தவர்கள்

அறிகிறார்கள்.


வென்ற அவர்களுக்கு இந்த ரகசியம் தெரியும்:

அப்படி ஒன்று இல்லை. 

Comments