பிரச்சினை, நிச்சயமாக, ஜனநாயக அமைப்பில் அல்ல
ஜனநாயக அமைப்பை உருவாக்கும்
உயிர் அங்கங்களுடையது.
தெருவில் நீங்கள் கடக்கும் நபர்
அவன் அல்லது அவளை
மூன்றாக அல்லது
நான்காக
அல்லது 30 ஆக
அல்லது 40 மில்லியனாக
பெருக்குங்கள்
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு
எதுவும் விளங்காமல் இருப்பதற்கான காரணம்
எதுவென்று
உடனடியாகத் தெரிந்துவிடும்.
நாம் மனிதகுலம் என்றழைக்கும்
சதுரங்கக் காய்களை குணமடையச் செய்ய ஆசைப்படுகிறேன்
எத்தனைவிதமான அரசியல் சிகிச்சைகளுக்கு
நாம் உள்ளாகியிருக்கிறோம்
இன்னமும்
தற்போதிருக்கும் வழியொன்றே
நம்மை குணமூட்டும்
என்று நம்பும் அளவுக்கு முட்டாளாகவும்
நாம் எல்லோரும் இருக்கிறோம்.
சக குடிமக்களே
பிரச்சினை எப்போதும் ஜனநாயக அமைப்புடையதில்
அல்ல
பிரச்சினை
நீதான்.
Comments