சார்லஸ் சிமிக் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறானா?
ஆமாம். சார்லஸ்
சிமிக் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.
சார்லஸ் சிமிக்
கடவுளைப் பிரார்த்திக்கிறானா?
அவன் தன் மனைவியை ஏய்த்துத் திரிகிறான்.
சார்லஸ் சிமிக்கின்
மனசாட்சி அவனை மிகவும் தொந்தரவுபடுத்துகிறதா?
அவ்வப்போது
அரட்டையில் மனசாட்சி எட்டிப்பார்க்கும்.
சார்லஸ் சிமிக்,
கர்த்தாவைச் சந்திக்கத் தயாராக உள்ளானா?
ஒரு சாலையைக் கடக்கும் அணில் அளவுக்கு.
ஒரு இருளான
தெருவிலிருந்து இன்னொரு தெருவுக்கு
யாரோவொரு இளைஞனால்
பட்டத்தின்
உயரத்துக்கு
உதைக்கப்பட்ட
காலி பீர் டப்பாவைப் போல
இடறி
விழுகிறான்
இதற்கிடையே.
Comments