Skip to main content

பொறுமையாக இரு – சார்லஸ் சிமிக்

 


இறந்தவர்களை 

உரத்த மணியால் எழுப்பும்

பழைய கடிகாரம்

இறுதியாக மௌனிக்கும்போது,

முடிவில்லாத காலம்

உள்நுழைந்தது.

ஒரு நீண்ட நடைக்கு

அழைத்துச் செல்ல இறைஞ்சி

ஒரு நாயின் 

கண்களுடன்

வாயிற்கதவை

வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது

ஒரு நிலைக்கண்ணாடி.

Comments