எரியும் தேவாலயத்தின் நெருப்பை
அணைக்க
மூன்று தீயணைப்பு
வண்டிகள்
விரையும் வேளையில்
அருகிலுள்ள
சலவைத் துறையில்
சட்டைகள் படபடத்தெழுகின்றன
ஒன்றிரண்டு
சட்டைகள் பறப்பதற்கும்
முயல்கின்றன.
சிதையிலிருந்து
கந்தலான ஞாயிற்றுக்கிழமை
உடைகளுடன்
திரும்பும்
அவர்கள்
சோளக்கொல்லை
பொம்மைகள் கூட்டத்தைப்போலத்
தெரிந்தனர்.
அவர்களைப் பண்ணைகளிலிருந்து
வங்கி நிர்வாகம்
வெளியேற்றிவிட்டது.
தீ வைத்தவனைப்
பொறுத்தவரை
எங்களுக்கு
இரண்டு அபிப்ராயங்கள் இருந்தன:
புதிய போதைப் பொருளை
குழந்தை ஒன்று முயற்சித்திருக்கலாம்.
அல்லது
தன்னை ஊனப்படுத்தியதற்காக
கடவுள் மற்றும்
தேசத்தின்மீதான
ஒரு ராணுவ வீரனின்
கோபமாக இருக்கலாம்.
Comments