உஷ்ணமான நீராவி இஸ்திரிப் பெட்டியால் என்னை அவள் மென்மையாக அழுத்தினாள். அல்லது தைத்துச் சீர்செய்ய வேண்டிய காலுறையைப் போல எனக்குள் கையை நழுவவிடுகிறாள். எனது ரத்தத்தின் தாரையைப் போல் அவள் பயன்படுத்துகிற நூல் உள்ளது. ஊசியின் கூர்மையோ ஒட்டுமொத்தமாக அவளுடையது.
அவளுடைய அம்மா
எச்சரிக்கிறாள். “ஹென்றிட்டா, வெளிச்சம் குறைந்த இடத்தில் உன் கண்களை நீ பாழாக்கிக்
கொள்ளப் போகிறாய்”. அவள் சொல்வது சரிதான். உலகத்தின் துவக்கத்திலிருந்து வெளிச்சம்,
இத்தனை குறைவாக இருக்கவேயில்லை. எமது குளிர்கால பிற்பகல்கள் நூறு ஆண்டுகளுக்கு நீடிப்பதாகச்
சில சமயங்களில் அறியப்பட்டிருக்கிறது.
Comments