இந்த நாட்களில்
பறவைகளும் விலங்குகளுமே
சுவாதீனமாய் உள்ளன
உரையாடுவதற்குத்
தகுதியானதாகவும்.
மேய்ச்சலை நிறுத்தி
எனக்குச் செவிகொடுக்கும் குதிரைக்காக
நான் காத்திருக்கத் தயார்.
ஒரு மரம்கூட
அருமையான துணை.
இலைகள் அடர்ந்து
தனது கிளைகளுக்காகப்
பெருமிதப்படும்
ஏதோவொரு ஓக்
மரம்
கிசுகிசுப்பைக்
கேட்பதற்காக
ஒரு அன்னியனிடம்
தாழ்கிறது.
ஒரு காகத்தால்
நல்ல நண்பனாக இருக்கமுடியும்.
என்னை நன்கு அறிந்த காகம் மீதே
இப்போது என் பார்வை பதிந்துள்ளது.
அதுவோ
அண்டைவீட்டுப்
புழக்கடையில்
எதையோ குறிவைத்து
பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
பொசுங்கிப்போன
அந்தத் தரையில்தான்
சில ஆண்டுகளுக்கு
முன்னால்
ஒரு டஜன் கோழிகள்
மேய்ந்துகொண்டிருந்தன
ஒரு சேவலும்
நாள் முழுக்க
கூவிக்கொண்டேயிருந்தது.
Comments