Skip to main content

தர்பூசணி – சார்லஸ் சிமிக்



தோட்டத்தில் புதிதாகப் பறித்த தர்பூசணி

ஆறு துண்டுகளாக வெட்டியபோது

கத்தி சப்புக்கொட்டுமளவுக்கு இனிப்பு.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல

தயாராகிக் கொண்டிருந்தனர்.

காகிதத் தட்டுகளை விநியோகித்தாள்

குழந்தைகளின் தாய்.

இலையுதிர் காலத்தைப் பார்க்க

அவள் இருக்கப் போவதில்லை.

 

நாங்கள் குனிந்து பதுங்கிக்

கூச்சலிட

இனிப்பான பழத்தை விரைந்து ருசிக்க

 திறந்த ஜன்னல் வழியாக

 பறந்துவந்த குளவி ஒன்று

 என் ஞாபகத்தில் உள்ளது.

 எங்கள் தலை

 எங்கள் முகத்தையெல்லாம்

 போர்த்தி மூடிக்கொண்டோம்

 குளவி சென்றபின்னர்

 எழுந்து

 உட்கார்ந்து

 நாங்கள் சிரித்தோம்.


Comments