எங்கள் காதல் புதியது
ஆனால்
படுக்கையின் ஸ்பிரிங்குகளோ
பழையது
எங்களுக்குப்
பிடித்த பாடல்களை
இசைத்துக்கொண்டிருந்தோம்
கீழ் தளத்தில்
உள்ளவர்கள்
முள்கரண்டிகள் காற்றில் நிலைக்க
சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்.
“ஷேக் இட்
பேபி”
“ஸ்லோ பூகி”
“ஷவுட் சிஸ்டர்
ஷவுட்”
இதற்கு மேல் பொறுப்பதற்கில்லை!
அவர்கள் காவலரை அழைத்தனர்.
எங்கள் வீட்டின்
கதவை உடைத்து
உள்ளே வந்த
அந்த
நீலச் சீருடையினரிடம்
கேட்டோம்:
பீர் கொண்டுவந்திருக்கிறீர்களா?
Comments