Skip to main content

தாமதமாய் வரும் விருந்தினர்களில் - சார்லஸ் சிமிக்


ராணுவ வீரர்கள்

ஒரு கத்தியால்

கண்களைத் தோண்டியெடுத்த

 பசுவொன்று அங்கே உண்டு

அதன் வாலுக்குக் கீழே

வைக்கோலைப் பற்றவைத்தனர்

அப்போதுதான் 

தாறுமாறாக

கண்ணிவெடி புதைக்கப்பட்ட

நிலத்தின்மேல் ஓடும்.

பின்னர்

என் தலைக்குள்ளும்

அவ்வப்போது.

Comments