நெப்போலிய காலத்தின் கடைசிப் படைவீரன் நான். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. நான் இன்னமும் மாஸ்கோவிலிருந்து பின்வாங்கிக் கொண்டிருக்கிறேன். வெள்ளை பிர்ச் மரங்கள் ஓரம் கட்டி நிற்கும் சாலை அது. எனது முட்டி வரை சேறு நிரம்பியிருக்கிறது. ஒற்றைக்கண்ணி என்னிடம் ஒரு கோழிக்குஞ்சை விற்க விரும்புகிறாள். என்னைப் போர்த்த உடைகள் கூட இல்லை. ஜெர்மானியர்கள் ஒரு வழியில் போய்க்கொண்டிருக்கின்றனர். நான் இன்னொரு வழியில். ரஷ்யர்களோ வேறு வழியில் கைகளை ஆட்டி விடைகொடுத்தபடி செல்கின்றனர். என்னிடம் சடங்குகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு பட்டாக்கத்தி உள்ளது. அதைக் கொண்டு நான் எனது நான்கடி நீளமுள்ள தலைமயிரை வெட்டிக்கொள்கிறேன்.
Comments