Skip to main content

திரைச்சீலை - சார்லஸ் சிமிக்

 


வானகத்திலிருந்து பூமிவரை

திரைச்சீலை தொங்குகிறது

அங்கே

மரங்கள்

நகரங்கள்

ஆறுகள்

பன்றிக்குட்டிகள்

மற்றும் நிலவுகள்

உள்ளன.

ஒரு மூலையில்

அணிவகுத்துப் போய்க்கொண்டிருக்கும்

குதிரைப்படை மீது

பனி பெய்துகொண்டிருக்கிறது

இன்னொரு மூலையில் பெண்கள்

நெல் நடவில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

நீங்கள் இதையும் பார்க்க முடியும்:

நரி ஒன்று கோழியைத் தூக்கிச் செல்வதை,

திருமணநாள் இரவில்

ஒரு நிர்வாணத் தம்பதியை,

ஒரு புகைத்தூணை,

கொள்ளிக்கண் கொண்ட

ஒருத்தி

பால் வாளி ஒன்றில் உமிழ்வதை.

 

திரைச்சீலைக்குப் பின்னால் என்ன உள்ளது?

-வெளி, செழிப்பான காலி வெளி.

 

தற்போது பேசிக்கொண்டிருப்பது யார்?

-         தொப்பியால் முகத்தை மூடி உறங்கிக்கொண்டிருப்பவன்.

 

அவன் எழுந்தால் என்ன நடக்கும்?

-          அவன் நாவிதர் கடைக்குப் போவான்.

 

மற்றவர்களைப் போல் அவனும் தெரிவதற்காக

அவர்கள் அவனது தாடி, மூக்கு, காதுகள் மற்றும் மயிரை

சிரைப்பார்கள்.

Comments