Skip to main content

கரப்பான் – சார்லஸ் சிமிக்


 நான் ஒரு கரப்பானைப் பார்க்கும்போது

உன்னைப் போல கடுமையாவதில்லை.

எமக்கிடையே

நட்பார்ந்த வாழ்த்து பகிர்வதைப் போல

நான் நின்றுவிடுகிறேன்.

000

இந்தக் கரப்பான் எனக்குப் பரிச்சயமானது

நாங்கள் இங்கேயும்

அங்கேயுமாக

சந்தித்திருக்கிறோம்.

நள்ளிரவில் சமையல்கூடத்தில்

இப்போதோ

எனது தலையணையில்.

000

எனது கருப்பு முடிகளில்

இரண்டு

அதன் தலையில்

நீட்டிக்கொண்டிருப்பதைப்

பார்க்கமுடிகிறது.

வேறு எதுவெல்லாமோ

யார் அறிவார்?

அது போலி பாஸ்போர்ட்டை

வைத்துக்கொண்டு திரிகிறது-

எனக்கு எப்படித் தெரியுமென்று

கேட்காதீர்கள்.

ஆமாம்

ஒரு போலி பாஸ்போர்ட்

அதில் எனது

குழந்தைப்பருவப் புகைப்படம்.

Comments