வரலாறு
இருட்டில்
தனது கத்திரிகளால்
வெட்டிப் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆதலால்
கை அல்லது காலை
இழந்து
ஒவ்வொன்றும்
வெளியே வருகிறது இறுதியாக.
என்றாலும்
இன்றுடன் விளையாட
உனக்கிருப்பது
இதுமட்டுமே….
இந்தப் பொம்மைக்குத்
தலையாவது
இருந்தது
அதன் உதடுகள்
சிவப்பாக.
மங்கிய காட்சிப்பொருள்களாக
மரவீடுகள்
காலியான வீதியில்
விளிம்பு கட்டி
நிற்கின்றன
அங்கே
பூக்கள் நிரம்பிய
இரவு கவுன்
அணிந்த
ஒரு குட்டிச்சிறுமி
காலி வீதியுடன்
பேசிக்கொண்டிருக்கிறாள்.
அது
ஒரு தீவிரமான
விவகாரம் போலத் தெரிந்தது
அவள் பேசுவதை
மழைகூடக் கேட்பதற்கு
விரும்பியது
என்பதால்
அவள் கண் இமைமுடி
மீது விழுந்து
அவற்றை மினுமினுக்க
வைக்கிறது.
Comments