விளக்குகள் அணைக்கப்பட்ட
கடைகள் இருக்கும் வீதியல்
ஒரு சிறுநகர
சலவைக்கடை
பளீர் விளக்குகளுடன்
ஒளிர்கிறது.
முகப்பில் வயோதிக
எல்விஸ் ப்ரஸ்லி
கசங்கிப்போன
பிரபலமான பெண்கள் பத்திரிகை
பக்கத்தைப்
படித்துக்கொண்டிருக்கிறார்.
சில தனி மேகங்கள்
இரவு வானத்தில்.
அவனது நைந்த
ஜீன்ஸ்
சலவை எந்திரத்தில்
சுழலும்போது
எல்லாவற்றையும்
விழுங்கும்
கண்புழைகளைக்
கொண்ட
சாவு முகமூடியைப்
போல்
சுழலும்
ஒரு மேகம்.
Comments