அவர்கள் வந்த படகு கடலில் மூழ்கிவிட்டது
நான் எங்கே
இவர்களுக்காகச் சமைப்பது?
கிழவி அங்குமங்குமாக
அலைந்தபடி கேட்கிறாள்
நெருங்கிச்
சூழந்து அழுதபடியோ
பிரிவாற்றாமையுடன்
தனியாகவோ அமர்ந்திருக்கின்றனர்
நான் எங்கே
இவர்களுக்காகச் சமைப்பது?
இந்தப் புயல்
நாளில்
படகில் எங்களிடம்
பயணித்து வந்தார்கள்
நீரில் மூழ்கிப்போனவருக்காக எழுந்த
அவர்களது ஓலங்களை
வானகம் கேட்கவில்லை
ஆனால், நான்
கேட்கிறேன்.
நான் எங்கே
இவர்களுக்காகச் சமைப்பது?
ஒரு கிழவி அங்குமங்குமாக
அலைந்தபடி கேட்கிறாள்.
இறந்தவர் கரையொதுங்கினர்
துர்கனவொன்றிலிருந்து உதறியெழுந்த
குழந்தைகளைப் போல
அவர்கள் கண்கள்
திறந்திருந்தன
கிழவியின் கையை முத்தமிடுவதற்காக
விரைந்து எழுவதற்கு
அவர்கள் முயற்சிக்கின்றனர்.
Comments