தோற்றத்தைத்
தாண்டிய அறிவின்
மீதான எமது
தீராத போதையை
ஒப்புக்கொள்வதற்கு
சேரியின்
கடைமுகப்பு நடவடிக்கையாக
நள்ளிரவில்
கூடுகிறோம்.
நாம் காணும்
உலகம்
உண்மையிலேயே
வெளியில் உள்ளதா,
அல்லது
நமது மனங்களைவிட்டு
நீங்காமல் உள்ளதா
என்று
எமது மூளைகளை
வருத்தி
குடும்பத்தினர்
மற்றும் நண்பர்களிடமிருந்து
தொலைந்து போனோம்.
அங்கு பரிமாறப்படும்
காஃபி மற்றும்
குக்கிகளை வாங்குவதற்காக
குனிந்த தலைகளுடன்
வரிசையில் நிற்கிறோம்.
கூடுதலாக விசாரிக்க
வேண்டிய குழப்படியாக
உதவியை வெளியே
கோரும் எமது மாயை.
Comments