நேசம் அல்லது கடவுள்
பற்றியதாக இருக்காது
ஒன்றுமற்றதைக் குறித்த
பாடமாக இருக்கும்
அது.
இங்கே
இந்த இடம் பற்றி
ஒன்றுமேயில்லையென
அவர்கள் சொல்வதை
விளங்கிக்கொள்ள நீங்கள் போராடுவீர்கள்.
அப்போது
பள்ளியில் புதிதாகச் சேர்ந்த
ஆசிரியரின் முகத்தைப்
பார்ப்பதற்கு
அச்சப்படும்
குழந்தையைப் போல நீங்கள் தோன்றுவீர்கள்.
Comments