அழகான வஸ்துகளே.
கணப்பொழுதில் மறையும் வஸ்துக்களே.
கிறிஸ்டோபர் அண்ட் ப்ளீக்கர் தெருமூலையில்
கோடை இரவின் சுகந்தத்தைப் போல
மௌனமாகவும் கைவிடப்பட்டவனாகவும்
பல ஆண்டுகளுக்கு முன்னால்
நான் ஒரு தபால் பெட்டிக்கு
எதிரே நின்று குனிந்து
ஒரு காதல் கடிதத்தை இட்டேன்
பதிலே வரவில்லை.
எமது வாழ்க்கைகள்
மோசம் போனதற்குக் காரணமான
தந்திர இழைகள் மீது
எனது கவனத்தைக் கோரி
ஒரு பூனை
அப்போது
என்னிடம் நடந்து வந்து
தன் பாதத்தை உயர்த்திக் காட்டியது.
Comments