மரங்களுக்கிடையிலான ஊஞ்சலில்
நீ அசைந்தாடிக் கொண்டிருக்கையில்
ஒரு மகா நகரம்
இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
நீ படித்துக்
கொண்டிருந்த தினசரி
கையிலிருந்து நழுவி தரையில் விழுந்தது.
பிற்பகலின் ஊதல்
காற்று
அதன்மேல் விருப்பம்கொண்டு
புல்வெளியில்
படபடக்க
அருகிலுள்ள குறுவனத்துக்குக்
கொண்டுசென்றது.
அப்படித்தான்
ஆந்தைகளால்
தலைப்புச் செய்திகளை
வாசிக்க முடிகிறது.
இரவு வருகிறது
விட்டு விட்டு ஒலிக்கும்
அகவல்
படுக்கையில்
உள்ள சுண்டெலிகளை
நடுங்கவைக்கின்றன.
Comments