மூளை அது
கபாலத்துக்குள்ளே
சில்லென்று உள்ளது:
என்கிறார்
ஆல்பெர்டஸ் மேக்னஸ்.
பிரபஞ்சத்தின் நெடும்பரப்பில்
ஒரு தூந்திரப் பரப்பு போல்.
நட்சத்திரப் புயல்.
பிரமாண்ட பனிப்பாறைகள் தொலைவில்.
துருவப்பகுதியில் இரவு.
பனியில் மாட்டிக்கொண்ட
ஒரு பெரும்கப்பல்.
அதன் மேல்தளத்தில் இன்னும்
சில விளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன.
அமைதி
மற்றும்
கடும்குளிர்.
Comments