என் வாழ்வே,
உன்னைப் பொருத்தவரை
எல்லாமும்
மாயையாகவும்
உண்மையாகவும்
உள்ளது.
வெடிகுண்டு
தொழிற்சாலையில்
இரவுப்பணி செய்யும்
தம்பதி
நாங்கள்.
“சத்தமில்லாமல்
வா”
என்று சொல்லியபடி
அவள் கையைப்
பிடித்து
நகரத்தைப் பார்த்திருக்கும்
கூரைமுகட்டுக்கு
அழைத்துச் செல்கிறார்.
இந்தக் கணத்தில் ஒருவர்
கவனமாகவும்
பொறுமையாகவும்
கேட்டால்
தூரத்தில்
தீயணைக்கும்
எந்திரத்தின்
மணியொலியைக்
கேட்கமுடியும்,
ஆனால் அபயம்
கோரும்
கதறல்கள் கேட்காது.
தீப்பற்றிய
இரவு உடையுடன்
ஒரு சிறுகுழந்தை
ஜன்னலிலிருந்து
குதிக்கும்
காட்சியைப்
பார்த்து
நிசப்தம்தான்
ஆழமாய் வளர்கிறது.
Comments