Skip to main content

ஞாயிறு பிரார்த்தனை - சார்லஸ் சிமிக்


 அந்தச் சேவல் 

பிஷப்பின் கிரீடத்தை அணிந்திருக்கிறது.

அதன் காலைநேர போதனையை

ஏற்றுக்கொண்டது போல்

தங்கள் தலைகளை அசைத்துக்கொண்டே

கொக்கரித்தபடி

நான்கு கோழிகள் சேவலுக்குப் பின்னால்

அணிவகுத்துச் செல்கின்றன.


புழக்கடை மரத்தின் உச்சியிலுள்ள

பூனையைப் பார்த்து

சைத்தானைப் பார்த்தது போல

குரைக்கும்

கருப்பு - வெள்ளை நாய்கூட

தனக்கான மதத்தைக் கண்டுபிடித்துவிட்டது.

 

பின்மதியத்தில்

கட்டிலில் படுத்திருக்கும்போதுதான்

தெகார்த்தேவுக்கு தத்துவக் கருத்துகள்

நன்கு உதிக்குமென்று

கேள்விப்பட்டிருக்கிறேன்.


நான் அப்படி அல்ல.

தேவாலயத்துக்குப் போகும்

அண்டைவீட்டாருக்கு

கையசைத்தபடி

குப்பைக்கூளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். 

Comments