நத்தை மோனத்தை வெளியிடுகிறது.
களைச்செடி ஆசிர்வதிக்கப்படுகிறது.
ஒரு நெடிய நாளின் முடிவில்
மனிதன்
மகிழ்ச்சியை அடைகிறான்
நீர், அமைதியை.
இறுதி இலக்கின்றி
எல்லாம் எளிமையாக இருக்கட்டும்
எல்லாம் அமைதியில் உறைந்து நிற்கட்டும்.
உன்னை உலகத்துக்குக் கொண்டுவந்தது
உன்னை மரணத்தில் எடுத்துச்செல்வது
இரண்டும் ஒன்றுதான்.
இரண்டும் அதேதான்.
நீண்ட கூர்முனை கொண்ட நிழல்
அதுவே அதன் தேவாலயம்.
புல் என்ன சொல்கிறதென்பதை
சிலர்
இரவில் புரிந்துகொள்கின்றனர்.
புல்
நிறையகூட அல்ல,
ஓரிரு வார்த்தைகளை
அறிந்திருக்கிறது.
அதே வார்த்தையை
புல்
திரும்பத் திரும்ப
கூறுகிறது.
திரும்பத் திரும்ப
ஆனால் அதிக சத்தமின்றி…
Comments