இறந்த நண்பர்கள் பலர்
எனக்கு.
கண்களைத் திறந்துவைத்தோ
மூடிக்கொண்டோ
அவர்களை முட்டலாமென்ற
நம்பிக்கையுடன்
நான் எப்போதும் அலையும் தெருக்கள்.
அடித்தல் குறியிட்ட பெயர்களுடன்
என்னிடமுள்ள முகவரிப் புத்தகங்கள் பல.
ஆண்டுக்கணக்கில்
சத்தமே இல்லாத
இரண்டு கடிகாரங்கள்
ஒரு டஜன் கைக்கடிகாரங்கள்.
பெரிய கருப்பு குடை ஒன்று
என்னிடம் உண்டு
வீட்டுக்குள்ளேயும்
வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போதும்
எவ்வளவு மழைபெய்தாலும்
அதை விரிப்பதற்கு அச்சப்படுவேன்.
ஒரு செருப்பு தைப்பவர்
ஷூவை பழுதுபார்ப்பதில்
தன்னை தொலைத்துவிட்டவனைப் போல
நானும் என் செய்கையைவிட்டு
தலையுயர்த்திப் பார்ப்பதேயில்லை.
எனது ஒரு கால்
இடுகாட்டுக்குழியில் இருப்பினும்.
Comments