Skip to main content

இதே தெருவில்தான் - சார்லஸ் சிமிக்

 


எரியும் கட்டிடமொன்றுக்கு வெளியே

அம்மா 

என்னை

தோளில் சுமந்து

கந்தல் துணியில் சுற்றிய பொம்மையென

நடைபாதையில் இருத்தினாள்.

பல ஆண்டுகள் கழித்து

அதே இடத்தில் நின்றுகொண்டு

வீடற்ற ஒரு நாயிடம்

பேசிக்கொண்டிருக்கிறேன்.

மேலும் மோசமான ஒன்றுக்குத் தயாராக

அது அங்குலம் அங்குலமாக

முன்நகர்ந்துகொண்டிருக்கிறது.

நிறுத்தப்பட்ட காருக்குக் கீழே

உடலைப் பாதி மறைத்துக் கொண்டிருக்கும்

அதன் கண்கள் நம்பிக்கையில்

ததும்பிக்கொண்டிருக்கின்றன.

Comments