தண்ணீரின் வெதுவெதுப்பை விரும்பியபடி
அடுப்பில் மெதுவாக
கொதிக்கும்
சூப் பானையில்
திளைக்கும்
ஒரு ஜோடி தவளைகள்
நாங்கள்.
குளம், குட்டையில் வசிக்கும்
அனைத்துத் தவளைகளையும்
இந்த வெப்பமண்டல
சொர்க்கத்துக்கு
வாருங்கள்
வந்து சேருங்கள் என்றும்
அவசரப்படுத்துகிறோம்.
அடியில்
எதையும் பொருட்படுத்தாது
தண்ணீரைச் சிதறி
விளையாடிக்
கொண்டிருக்கும்
குடும்பத்தினரையும்
நண்பர்களையும்
பார்த்தபின்னால்
அவர்களால் எங்கள்
அழைப்பை
புறக்கணிக்கவே இயலாது.
Comments