Skip to main content

விலங்கு சாகசங்கள் - சார்லஸ் சிமிக்

  


ஒரு கரடி வெள்ளிக் கரண்டி கொண்டு

சாப்பிடுகிறது

இரண்டு குரங்குகள்

இடுகாட்டுக் குழியைத் தோண்டுவதில்

கைதேர்ந்துவிட்டன.

நுண்கணிதம் போடும் எலிகள்.

பெண்ணிடம்

புணர்ச்சியில் ஈடுபடும்

ஒரு போலீஸ் நாய்

வெட்டியானைப் போல

உடலை அளவெடுத்துக் கொண்டிருக்கிறது.

 

தனது இருப்பு பற்றிய சந்தேகங்களால்

ஒரு மூட்டைப்பூச்சி அவதிப்படுகிறது.

சிரிக்கும் புறா அதிசயம்.

பில்லியர்ட்ஸ் விளையாடும்

ஆயிரம் வயதான ஆமை.

தன் தொண்டையை

தானே அறுத்துக்கொண்டு

ரத்தம் வழியும்

ஒரு கோழி.

 

சாயங்காலங்களில்

அவை எல்லாம் கூண்டில்

நெருக்கியடிக்க

விலங்குகளைப் பயிற்றுவிப்பவனோ

சவுக்குடன்

சர்க்கரைக்கட்டிகளோடு

தனது இருக்கையில்.

மலிவான சுருட்டுகளைப் புகைத்துக்கொண்டு

புதிய சீட்டுக்கட்டில்

உள்ள சீட்டுகளை

அடையாளமிட்டுக் கொண்டிருக்கிறான்.

Comments