Skip to main content

சர்க்கஸ் – சார்லஸ் சிமிக்


இரவு வானில்

கரடியும் சிங்கமும்

தோன்றிவிட்டது.

 

நெருப்பு விழுங்குபவர்கள்

தீவட்டி வித்தைக்காரர்கள்

பின்னணியில்.

 

சாதாரண கண்களுக்கு

அவர்கள் செய்யும்

சாகசங்கள்

தெரியவில்லை.

 

வானியலாளர்களுக்குத் தெரிகிறது

எங்கள் அண்டைவீட்டு நாய்க்கும்.

படுக்கையிலிருப்பவர்களிடம்

நள்ளிரவுக் காட்சி துவங்கிவிட்டதென்று

அது அறிவிக்கிறது.

Comments