Skip to main content

பண்பாட்டு அடையாளம் திராவிடம் - தொ. பரமசிவன்


நாற்பதாண்டுக் காலமாகத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வில் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கி உருவாக்கி உழைத்தவர் தொ.பரமசிவன். கல்வெட்டுச் சான்றுகள், தொல்பொருள் ஆதாரங்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே வரலாற்றை ஆய்வதைவிட்டுப் பண்பாட்டு வரலாற்றை அடித்தள மக்களின் வாழ்வுமுறையிலிருந்தும் நம்பிக்கை மற்றும் அவர்களின் சடங்குகளிலிருந்தும் எழுதியவர் தொ.பரமசிவன்.

மக்கள் வாழ்க்கைச் சார்ந்த பண்பாட்டுக்கூறுகளை வைத்து நம் வரலாற்றை ஆராய்வது தொ.பரமசிவன் போன்ற முன்னோடிகளால் தான் உருவாக்கப்பட்டது. சடங்குகள் நம்பிக்கைகள் போன்றவற்றையெல்லாம் வரலாற்றை ஆராய பயன்படுத்தலாம் என்று வழிகாட்டியவை அவரது ஆய்வுகள். அழகர்கோயில் பற்றிய அவரது ஆய்வுமுறை இத்துறையில் ஒரு மைல்கல். பன்னிரெண்டு ஆண்டு கால கள ஆய்வின் விளைவு அது. திராவிட இயக்கத்தின் நேர்மறையான செல்வாக்கு பெற்ற பெரியாரியர் இவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் தொ. ப, 2011-ம் மணிவிழாவைக் கொண்டாடிய தருணத்தில் இந்த நேர்காணல் செய்யப்பட்டது. தி சண்டே இந்தியன் இதழில் பணியாற்றியபோது எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இந்த வேலையை எனக்குப் பணித்தவர் அதன் ஆசிரியராக இருந்த அசோகன். எனது நேர்காணல்களில் அதிகம் வாசிக்கப்பட்ட நேர்காணல்களில் ஒன்று தொ.ப.வினுடையது. ஆனால் என்னிடம் இதன் பிரதி தொலைந்துபோயிருந்த நிலையில் இதைக் கொடுத்துதவியர் மனோன்மணி. அவருக்கு எனது நன்றி

பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே காலையில் மூடியிருந்த கடைத்திண்ணை ஒன்றில் நண்பர்களோடு தேநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்த தொ.பவை, கேள்விகள் ப்ரிண்ட் அவுட்டோடு சந்தித்தேன். ஏற்கெனவே மதுரை காலேஜ் ஹவுஸ் விடுதியருகே ஒரு காலைநேரம் ஒரு சிகரெட் புகைக்கும் அவகாசத்தில் சந்தித்திருந்தேன். காலை மறுபடியும் 11 மணிவாக்கில் தன் வீட்டுக்கு வரச்சொன்னார். சரியாக 19 நிமிடங்கள் நேர்காணலுக்கு எடுத்துக்கொண்டார். ஒரு வாக்கியம் கூட அகற்றப்பட வேண்டாத நேர்காணலாக அத்தனை துல்லியமாக அவரது பேச்சு இருந்தது.  

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுத்துறையில் முன்னோடி நீங்கள்; இத்துறையில் நீங்கள் ஏற்படுத்திய திருப்பங்கள் என்ன?

ஆராய்ச்சி வழிமுறைகள் என்று சொல்லக்கூடிய ஆங்கிலேயர் வழிமுறையைத்தான் எனக்கும் கற்றுக்கொடுத்தார்கள். பாஜ்பாய், ஆண்டர்சன், பாலின் வி.யுங் போன்றவர்களின் முறையைத்தான் எனக்கும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் ஆங்கிலேயரின் முறை ப்ரொபைல்’ என்று சொல்லக்கூடிய ஒரு பக்கப் பார்வைதான் எல்லா விசயங்களிலும் கிடைக்கின்றன. முழுமையான பார்வையை நான் நம்முடைய எளிய மக்களுடைய உரையாடலிலிருந்து எடுத்துக் கொண்டேன். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து.

குறிப்பாக, அவர்களது சொல்லடைகள், பழமொழிகள், கதைகள், நம்பிக்கைகள், சடங்குகள் இவைகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பதே எனது நம்பிக்கை. ஒரு உதாரணம் சொல்கிறேன். உயரமாக வளரும் ஒரு தென்னை நாற்று வாங்கிச் செல்கிற ஒரு விவசாயி என்னுடன் பேருந்தில் வந்து கொண்டிருந்தார். இது என்ன ரகம் என்று கேட்டேன். அவர் ‘நக்கவாரி` என்று பதிலளித்தார். அவருக்குத் தெரியாது. நக்கவாரம் என்றொரு தீவு உண்டு என்பது. அதைத்தான் நாம் நிகோபர் தீவுகள் என்று சொல்கிறோம். முதலாம் ராஜேந்திர சோழன் வெற்றிகண்ட தீவுகளிலே ஒன்று. அது தென்னை வளம் மிகுந்த பூமி. நக்கவாரத்திலிருந்து வந்த அந்த வகைக்கு நக்கவாரி என்று இவர்கள் பெயர் இட்டிருக்கிறார்கள். எப்படி கலிங்கத்திலிருந்து வந்த பட்டாடை 

பிறந்த இடத்தால் கலிங்கம் என்று பெயர் பெறுகிறதோ, சின்னாளம்பட்டியில் நெய்யப்பட்ட சேலை, சின்னாளப்பட்டி என்று பெயர் பெறுகிறதோ அதுபோல நக்கவாரத்திலிருந்து வந்த தென்னை நக்கவாரி என்று அழைக்கப்படுகிறது. நக்கவாரத்தீவைப் பற்றி அந்த விவசாயி தெரியாமல் இருக்கலாம். நக்கவாரி என்ற சொல்லின் வேரைக் கண்டுபிடிப்பதற்குக் கல்வெட்டுத் தகவல் வழிகாட்டுகிறது.

கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளைத் தாண்டி வேறு ப்ரொபைல் என்ற குவிமைய  ஆரா ய் ச் சி வ ழி முறையிலிருந்து வேறுமுனைகளில் இருந்து பண்பாட்டை ஆராய முடியும் என்ற கருத்தில்தான் எனது முயற்சியைச் செய்தேன். இதற்கப்பால் த மி ழ ர் க ள் விளையாட்டையும் ஆராய்ந்துள்ளேன். பல்லாங்குழி விளையாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். பல்லாங்குழி விளையாட்டில் ஐந்தைந்து முத்துடன் ஏழேழு குழிகள் இருவருக்கும் என ஆட்டம் தொடங்கும். திரும்ப எந்தக் குழியிலும் ஐந்து வரக்கூடாது. நான்கு வந்தவுடனேயே ‘பசு’ என்று எடுத்துவிடுவார்கள். ஐந்தைத்  தொட்டுவிடக்கூடாது. இது ரொம்ப யோசிக்க வைக்கிற விளையாட்டு. தோற்றுப்போனால் எதிர்தரப்பு உங்களைச் சுரண்டிவிட்டது என்று நீங்கள் நினைக்கவே மாட்டீர்கள். நமக்கு விதி இந்த விளையாட்டில் இவ்வளவுதான் என்று சொல்லிவிடுவீர்கள். 

தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை இந்த விளையாட்டு உங்களுக்குத் தருகிறது இல்லையா? நான் ஏமாற்றி விளையாடிவிட்டேன் என்று சொல்லமாட்டீர்கள். நான்தான் குழியை தப்பாகப் பிரித்து ஆடிவிட்டேன் என்று ஏற்றுக்கொள்வீர்கள். சமத்தன்மை குலைந்து ப ள் ள ங் க ள் மேடாகிவிடும்; மேடு பள்ளமாகிவிடும் என்ற தத்துவத்தை விளக்கிச் சமத்துவம் எப்படிச் சமூகத்தில் சிதைகிறது என்பதைக் காட்டும் விளையாட்டு இது. தனிச்சொத்து எப்படி உண்டாகிறது என்பதை விளக்கும் விளையாட்டு இது. இதைப் பெண்களுக்கு வீடுகளுக்குள் விளையாட கொடுக்கப்படுகிறது. இந்த ஆய்வு முறையை வெள்ளைக்கார்ர்களால் ஒருபோதும் செய்யமுடியாது.

இதுபோன்ற ஆராய்ச்சிமுறைக்குத் தூண்டுதலாக இருந்தது, ஓரளவுக்குப் பேராசியர் வானமாமலையையும், சாத்தான்குளம் ராகவன் பிள்ளை மற்றும் மயிலை.சீனி வேங்கடசாமி ஆகியோரைச் சொல்லலாம். இவர்கள் மூன்று பேர்தான், புத்தகங்களுக்கு வெளியே போய் மக்களை வாசிப்பதைப் பற்றிக் கற்றுக் கொடுத்தவர்கள். 

உங்கள் காலத்தில் களப்பணிகள் செய்த அனுபவத்தைப் பற்றி...

நான் ஆய்வு செய்தபோது காமிரா இருந்தது. அளவில் மிகப்பெரிய டேப் ரிக்கார் ட ர் இ ரு ந் த து . ஆனால் வண்ணப்படங்கள் எடுக்க முடியாது. 

மும்பைக்கு அ னுப்பித்தான் வண்ணப்படங்களைப் பிரிண்ட் எடுக்க முடியும். பத்து, பதினைந்து முகவரியைக் கள ஆய்வு செய்வதற்கு கையில் வைத்துக் கொள்வோம். பேருந்து நிலையத்திற்குச் செல்வோம். எந்த ஊருக்குப் பேருந்து உடனடியாகக் கிடைக்கிறதோ அந்த ஊருக்குப் போய்விடுவோம். சந்திக்கப்போகிற எளிய கிராமவாசியிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டுப் போகமுடியாது. அங்கே அவருக்காகக் காத்திருக்க வேண்டும். அதைவிடப் பெரிய விசயம் என்னவென்றால், போன உடனேயே நேரடியாகவோ மறைமுகமாகவோ நமது சாதி குறித்துக் கேட்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். இன்று வரை தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள், கள ஆய்வு செய்யமுடியாது என்பதே பச்சையான உண்மை. நெல்லை மாவட்டத்திலாவது பரவாயில்லை. மற்ற மாவ ட் ட ங் க ளி ல் நிலைமை மிகவும் மோசம்.

நீங்கள்  ஒரு  சொல்லை உச்சரிக்கும் முறையிலிருந்தே அவர்கள் சாதியைக் கண்டுபிடித்து விடுவார்கள். இன்னும் சாதி வழக்காறுகள் இருக்கின்றன. நெல்லை மாவட்டத்திலே அவாள், அவுக, அவிய, அவ்வ எனப் பல சொற்கள் இருக்கின்றன. இந்தச் சொல்லை உச்சரிக்கிற முறையிலேயே அவர்கள் என்ன சாதி என்பது வெளிப்பட்டு விடும்.

தமிழகத்தில் முற்காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு பரவலாக இருந்ததைப் பற்றி ஆராய்ந்துள்ளீர்கள். இப்பின்னணியில் அப்போதிருந்த பெண்களின் நிலைக்கும் தற்போதிருக்கும் பெண்களின் நிலைக்கும் வித்தியாசம் என்ன?

பெண்களின் எழுதப்படாத சோகங்கள் காலம்காலமாக நீடித்தே இருக்கின்றன. ஆனால், தாய்த் தெய்வ வழிபாடு அவர்களுக்கெல்லாம் ஒரு மருந்து போல, ஓபியம் போல இருந்தது. பெண் அதிகாரத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியது தாய்த் தெய்வங்கள்தான், கையிலே ஆயுதம் வைத்திருக்கக்கூடிய தாய்த் தெய்வம் அவளது நம்பிக்கையின் சின்னமாக இருக்கிறது. அதனால் தாய்த் தெய்வ கோயில்களிலே பெண்கள் சாமியாடுவதும் திருநீறு வழங்குவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறதே, அதுவே அதற்குச் சான்று. 

பெண்கள் தங்கள் அன்றாடம் ஒடுக்கிவைக்கப்படும் வாழ்வில் நம்பிக்கை வைக்கும் இடமாக தாய்த்தெய்வக் கோயில்கள் இருக்கின்றன. இன்றுவரை அது தொடர்கிறது. ஆகம பெருஞ்சமய கோயில்களைவிட ஆயிரம் மடங்கு அதிகமான சிறிய கோயில்கள் இன்றும் இருக்கின்றன. சென்னையிலே ஒரு கபாலீஸ்வரர் மற்றும் பார்த்தசாரதி பெருங்கோயில்களுக்கு நடுவே ஐந்நூறு 

அம்மன் கோயில்கள் இ ரு க் கி ன் ற ன அல்லவா. இதுதான் அதற்கு உதாரணம். 

நீங்கள் திராவிட இயக்கத்தின் தாக்கம் உ ள் ள வ ர் ; பெரியாரியர். நீங்கள் மேற்கொள்ளும் பண்பாட்டு ஆய்வுகளும் பெரியாரி கருத்துகளும் முற்றிலும் முரண்படுவதல்லவா?

மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம்.  பெரியார், ஆகம வழிபட்ட விழாக்களையும், பெரிய கடவுள்களான பிள்ளையாரையும் ராமனையும் எதிர்த்தாரே தவிர, அவர் சுடலைமாடனையும் கருப்பசாமியையும் காத்தவராயனையும் எதிர்த்தாரா? இல்லையே. ஏனென்றால் பெரியாரின் நோக்கம் என்பது விடுதலை என்பதுதான். ஆகம வழிபாடு, ஆகம நெறிக்குட்பட்ட நிறுவனங்கள், தெய்வங்கள், அதற்குரிய சடங்குகள் தோன்றும் போதுதான் குருமார்கள் உருவாகி அடிமைத்தனமும் சேர்ந்தே வருகிறது. நாட்டார் தெய்வ வழிபாட்டில் அடிமைத்தனம் கிடையாது. பெரியார் காத்தவராயன் சிலையை உடைக்கலையே! ராமர் சிலையைத் தானே உடைத்தார்.

இதில்தான் கடவுள் வேறு, தெய்வம் வேறு என்ற நிலைமையை வேறுபட்டு நின்று பார்க்கவேண்டும். கடவுள் என்பது எஜமானன். ராஜசிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கிற எஜமானன். தெய்வம் என்பது என்னோடு சமதளத்தில் பழகிக் கொண்டிருப்பது, எ ங் க ளு க் கு வே ண் டி ய  வரம் தரவில்லையென்றால் நம் வீட்டுப் பெண்கள் தெய்வத்தை உனக்குக் கண் இருக்கிறதா என்று கேட்பார்கள். பெண்கள் கடவுளைச் சபித்து மண் அள்ளித் தூற்றுவதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். இதிலே சமத்தன்மை குறையாத உறவுநிலை உள்ளது. இதுதான் தெய்வத்துக்கும் அவர்களுக்குமான உறவு. ஒ வ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு கோயில் உண்டல்லவா? 

அங்கே யாரேனும் ஒருவர் இறந்துபோனால் அந்தக் குறிப்பிட்ட தெய்வம் கதவைச் சாத்திக்கொண்டு குளிக்காமல் உண்ணாமல் துக்கம் காக்கிறது . மாநகராட்சிப்  பகுதியிலே எந்தச் சாதிக்குரியவர் இறந்து போனாலும் அதற்குரிய கோயிலின் நடை சாத்தப்படுகிறது. 

அ த ற் கு ப்  பூசை கிடையாது. அபிசேகம் கிடையாது. சடலத்தை எடுத்துப் போன பிறகுதான் எல்லாம் ந ட க் கு ம் . ஒ ரு உறவினரைப் போல தெய்வமும் துக்கம் காக்கிறது. அப்போதுதான் தெய்வம் எனக்கு அணுக்கமாகிறது. அது எனக்கு அம்மா. ஆ க ம வ ழி ப் ப ட் ட  பெரிய வடிவங்களைத்தான் நான் கடவுள் என்கிறேன்.

11ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய பிற பண்பாட்டுக்கூறுகள் அவற்றின் தாக்கங்கள் பற்றி நிறைய எழுதியுள்ளீர்கள்? அதன் சாதகங்கள் மற்றும் பாதகங்களை இன்றையச் சூழலின் பின்னணியில் சுருக்கமாக சொல்ல முடியுமா?

வெளிப்படையாகவே பேசலாம். விஜயநகர ஆட்சியின் போது பிராமணர்கள் தொடங்கி ஒடுக்கப்பட்டவர்கள் வரை தெலுங் கு  ம க் க ள்  த மி ழ க த் தி ல் 

குடியேறினார்கள். அவர்களுடைய வருகைக்குப் பிறகு தான் நிறைய விசயங்கள் புராண அடிப்படையிலும் ஆகம அடிப்படையிலும் மாற்றப்பட்டன. அதற்கு முன்பு காரடையான் நோன்பும் வரலட்சுமி நோன்பும் இங்கே கிடையாது. தீபாவளி கூட அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது கிடையாது. இதற்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட பாதகமான அம்சங்கள்தான் நிறைய. 

நேர்மறையான தாக்கங்கள் என்று சொன்னால் அங்கே இருக்கும் உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டின் பருத்தி வேளாண்மைக்கும் நெசவுக்கும் செய்த தொண்டு தான் தமிழகத்தின் பொருளுற்பத்தி முறையில் பெரிய பங்களிப்பாக இருந்தது. சௌராஷ்டிரர்களின் பங்களிப்பும் இதில் சேரும். இத்துடன் ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை உள்வாங்கிக் கொள்ளும் வேறு சில முறைகளும் உள்ளன. குறிப்பாக ரொட்டி உண்ணும் பழக்கம் பற்றிப் பேச வேண்டும். தமிழகத்தில் வெள்ளையர் வருகைக்குப் பின்பு தான் ரொட்டி என்ற உணவு அறிமுகமாயிற்று. அதைத் தமிழகம் புறம் தள்ளவில்லை. பிரசவத்துக்குப் பின்பு பெண்கள் சாப்பிடும் ச த் து ண வாக ரொட்டி இங்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் தான் கலாச்சார தகவமைப்பு. இதற்கு 250 வருட வரலாறு இருக்கிறது.

இத்துடன் சிகப்பு நிறத்தோல் மீது ஏற்பட்ட கவர்ச்சியும் தமிழக மக்களுக்கு 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே ஏற்பட்டது. ‘கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு’ என்றே தமிழில் கறுப்பு நிறம் போற்றப்பட்டுள்ளது. இங்கே கறுப்புதான் அழகாக ஒரு காலத்தில் இருந்தது. இஸ்லாமியப் படையெடுப்புகள், அதற்குப் பிறகு ஏற்பட்ட படையெடுப்புகளைத் தொடர்ந்து பார்த்து வந்தால் ஆட்சியதிகாரம் கறுப்பு நிற தமிழ் மக்களிடம் இருந்து மெதுமெதுவாகப் பறிக்கப்படுகிறது. மனிதனுக்கு ஆதியிலிருந்தே அதிகாரத்துக்கான வேட்கை இயல்பு உண்டு. இதனால் சிகப்பு என்பது அதிகாரம் சார்ந்தது. அதிகாரத்தோடு தொடர்புடையது என்ற எண்ணம் மேலோங்கி தமிழ் உளவியல் சிதைத்து மாற்றப்படுகிறது. இன்றைக்கும் கறுத்த நிறமுள்ள ஒரு வட்டாட்சியரைவிட சிகப்பு நிறமுடைய வட்டாட்சியர் தன்னுடைய பணியைத் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்பதே யதார்த்தம்.

தமிழ்ப் பண்பாட்டுக்குள்ள தனித்தன்மை என்ன?

குடும்ப அமைப்பைப் பேணிக் கொள்வதற்குத் தாய்க்குத் தரும் முக்கியத்துவம் அளவுக்கு தாய்மாமனுக்கு தரப்பட்டிருக்கும் இடம். இன்னொன்று பிணத்துக்குத் தந்திருக்கும் மரியாதை. இறந்தவர்களுக்குத் தரப்படும் மரியாதை. மற்றொன்று பெண்ணின் உடல் மீதான வன்முறையை நீங்கள் பொது இடத்தில் இப்போது தமிழகத்தில் பகிரங்கமாய் யாரும் நடத்திவிட முடியாது. டெல்லிக்கு அருகே முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காவல்துறை அதிகாரி ஒரு பெண்ணை நிர்வாணமாக அழைத்துக் கொண்டு போனது போன்ற சம்பவங்கள் இங்கே நடைபெறாது. தெரு வழியாகத் துச்சாதனன் பாஞ்சாலியை இழுத்துச் செல்வதைப் பார்த்து பாரதியாரே பாடியுள்ளார். துச்சாதனன் தெரு வழியாகப் பாஞ்சாலி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியைப் பார்த்த சனங்கள் நெட்டை மரங்கள் போல, பெட்டை புலம்பலிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்றும் ஏன் அடிக்காமல் விட்டார்கள் என்றும் கேட்கிறார். விருந்தோம்பல் என்பது நமது பண்பாட்டுக்கே உரிய தனித்த கூறு.

உலகமயமாதல் பின்னணியில் அனைத்துப் பண்பாட்டு அடையாளங்களும் ஒடுக்கப்படும் பண்பாட்டு சிதைவுகள் ஏற்படும் இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் எப்படி தங்கள் பண்பாட்டை தக்கவைக்கப் போகிறார்கள்?

பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்பதே உற்பத்தி சார்ந்த விசயம். இன்றைய நவீன உலகில் உற்பத்தி மூலதனத்தைச் சார்ந்துள்ளது. இந்த மூலதனம் பொருளுற்பத்தியிலிருந்து தனி நபரை அந்நியப்படுத்துகிறது. அதாவது பண்பாட்டிலிருந்து அந்நியப்படுத்துகிறது. நான் சிறுவனாக இருந்தபோது எனக்கு வேண்டிய பட்டத்தை நானே செய்து கொள்வேன். எனக்கு வேண்டிய விசிலை பூவரச மர இலையிலிருந்து இரண்டு ஓட்டாஞ்சில்லு வைத்துச் செய்துகொள்வேன். இன்று எல்லா விளையாட்டு கருவிகளும் கடையிலிருந்தே குழந்தைகளுக்கு வாங்கித் தரப்படுகின்றன. தனக்குரிய விளையாட்டுக் கருவியைத் தானே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கூட குழந்தைக்குத் தரப்படுவதில்லை. உற்பத்தியிலிருந்து அந்நியப்படும்போது மனிதன் காலச்சாரத்திலிருந்து அந்நியப்படுகிறான். இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் மனிதனைப் பொருளுற்பத்தியிலிருந்து அந்நியப்படுத்தி விடுகிறது.

நீங்கள் பிறந்து வளர்ந்த பாளையங்கோட்டை, உங்கள் ஆளுமையை எப்படிப் பாதித்துள்ளது?

இது பாரம்பரியமாக எழுத்தறிவு பெற்ற ஊர். பேராசிரியர் நா.வானமாமலை, ராகவன் பிள்ளை போன்றவர்கள் வாழ்ந்து எழுதிய ஊர். நான் பிறந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே மாவட்ட மைய நூலகம் இருந்தது.பெண்கள் கல்லூரி இருந்தது. கண் தெரியாதவர்களுக்கான பள்ளியும், காதுகேளாதவர்களுக்கான பள்ளியும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே தோன்றிய ஊர் இது. கல்வித்தாகத்தை இயல்பாகவே பெற்றுள்ள மண் இது. வாசிப்புப் பழக்கமுடையவர்கள் நிறைய இருந்தார்கள். அருகில் உள்ள திருநெல்வேலி நகரில் இல்லாத அளவுக்கு இங்கேதான் பழைய புத்தகக் கடைகள் அதிகம். அது மட்டுமல்ல; பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி எழுத்து வடிவ நூல் இங்கேதான் முதல்முறையாக ஆக்கப்பட்டது. ‘வறியவர்க்கெல்லாம் கல்வி நீரோடை; வரவிடவி ல்லை மதகுருக்கள் மேடை’ என்பார் பாரதிதாசன். இது சைவ வைணவ மதகுருக்களுக்குத்தான் பொருந்தும். ஆனால் கிறித்தவ குருக்கள் இங்கே கல்வியை வீட்டைத் தேடிக்கொண்டு வந்தார்கள். இலவசப் பள்ளிகளைத் தொடங்கினார்கள். அதிக கல்விக் கட்டணங்கள் கிடையாது. இந்த மாவட்டத்தில் மிகக் குறைந்த செலவில் கல்வியை, எளிய மக்களுக்கு வழங்கியதில் கிறித்தவ மதத்துக்குப் பெரிய பங்குண்டு.

தமிழக மக்களாலும், திராவிட கட்சிகளாலும் ஒரு நல்ல தலையீட்டைச் செய்து ஈழத்தமிழர் இனப்படுகொலையை நிறுத்த இயலவில்லையே? மார்க்சிய இயக்கங்களும் இதில் சரியான நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லையே? இதற்குக் கலாச்சார ரீதியான காரணங்கள் என்ன?

உலகத்திலேயே கொடுமையான தண்டனை ஏமாற்றம்தான். ஒரு ஐம்பது ஆண்டுகால உழைப்பைக் கலைஞர் பாழாக்கிவிட்டார். ஒரு தமிழ் விரோதக் கட்சி 

மத்தியில் அதிகாரத்தில் இருக்க, இங்கேயுள்ள மாநில ஆட்சி தனது அதிகாரத்தை இழக்க விரும்பவில்லை. அதனால் தலைகுனிந்து தாழ்பணிந்தது. மார்க்சியர்களைப் பொறுத்தவரை 1925இலிருந்தே ஏமாற்றி வருகிறார்கள்.

குறிப்பாக இந்தியா பல்வேறு மேடுபள்ளங்களை உடைய நாடு என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை. சாதி, மதம், இனம் கலாச்சார வெளிப்பாடு உடைய நாடு என்பது அவர்களது புரிதலில் இல்லை. அவர்களுடைய சர்வதேச அரசியலில் மாவோ மட்டும்தான், ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம்’ என்பதை நடைமுறைப்படுத்தியவர். ரஷ்யப் புரட்சியும் சீனப்புரட்சியும் வேறுவேறாகவே நிகழ்ந்தன. அது போன்றில்லாமல் ரஷ்யாவின் நிலைப்பாட்டையே எடுத்ததால் மக்களின் மனநிலையோடு இவர்களால் ஒன்றிப்போக இயலவில்லை. சிங்கூர் மக்களின் மனநிலையை இவர்கள் புரிந்துகொள்ள இயலவில்லை. தோற்றுப்போனதற்காக வெட்கப்பட்டார்களா?

ஸ்டாலின் காலத்தில் நடைபெற்ற அரசியல் களையெடுப்பைப் போலத்தான் கொள்கையாளர்களைத் தொடர்ந்து இவர்கள் கொன்று கொண்டிருக்கிறார்கள். இந்தி பொது மொழி என்பதை ஆரம்பத்திலேயே கோசாம்பி போன்றவர்கள் முரண்பட்டார்கள். இந்தியா என்ற பெரிய அடையாளத்திற்குள் அனைத்துப் பிராந்திய அடையாளங்களையும் கரைக்க முயலும்போது இவர்கள் தொடர்ந்து தோற்றுத்தான் போவார்கள். திராவிட இயக்கத்தினருக்கு நேர்ந்ததும் அதுவே.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உள்ளார்ந்த பண்பே இதுதான். அனைத்து இயக்கங்களையும் மனதளவிலும் சிந்தனை அளவிலும் அரிக்க வைப்பது அது. அப்படித்தான் திராவிட இயக்கத் தலைவர்களும் சிதைவுக்கு உள்ளானார்கள். நாத்திகம் பேசிய இயக்கம், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பேச வந்ததே வாக்கு வங்கி அரசியல்தானே. அப்படித்தான் சிதைவு தொடங்கியது. இதையொட்டி சமூகமும் ஊழல் ம யமானது . இலங்கையில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டுதான் தூங்கினோம். எங்களால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. பி.பி.சி. இரவு ஒன்பதே காலுக்கு நான் தமிழோசை கேட்பேன். அதையெல்லாம் அப்போது நிறுத்திவிட்டேன். எத்தனை நாளைக்குத்தான் சாவைக் கேட்டுக்கொண்டே இருப்பது. நாளைக்குச் சாகப்போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும். இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர்மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.

பண்பாட்டு ஆய்வுக்கு நீங்கள் வந்ததன் பின்னணி என்ன?

நான்  என். ஜி. ஓ  காலனியில் குடியிருந்தபோது எனது வீட்டுக்கு அடுத்த வீட்டில் சிறிய பையன் இருந்தான். விளையாட தோழர்களே இல்லாமல் இருப்பான். அவன் ஒத்தையாகப் பந்தைப் போட்டுக் கொண்டு ஆடிக்கொண்டிருப்பான். அதுபோல ஆடுகளம் இருந்து ஆடுவோர் இல்லாமல் அப்பகுதி இருந்தது. எனவே நான் இங்கு ஆடவந்தேன்.

இன்று நாட்டுப்புறவியல் ஆய்வு மற்றும் படிப்புகள் கவர்ச்சிகரமான துறையாகியுள்ளது. ஆனால் இதனால் நாட்டுப்புறக் கலைக்கும் கலைஞர்களுக்கும் ஏதாவது வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா?

நாட்டார் வழக்காற்றியல் துறையின் வளர்ச்சி என்பது இதுவரை ஊடகங்கள் கட்டியமைத்த பிம்பங்களுக்கு எதிரானது. அவற்றை அவர்கள் வளரவிடமாட்டார்கள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு முடிவுகள், கடந்த ஒரு நூற்றாண்டாக அச்சு ஊடகங்களும், கல்வி அமைப்பும் கூறிய கருத்துக்களை முழுவதும் உடைத்துள்ளது. அதனால் இந்த்த் துறையின் வளர்ச்சியில் அவை எதிர்மறையான பங்கையே ஆற்றும். தஞ்சை அருங்காட்சியகத்திலே இருக்கிற கஜசம்ஹார மூர்த்தி சிலையைவிட நேர்த்தியாக ஒரு கல்லிலே கருப்பசாமி சிலையை வடிக்கவும் முடியும் என்பதை அவர்கள் நம்ப மாட்டார்கள். வடிக்கவும் முடியும்; இரசிக்கவும் முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆளும் வகுப்பாருக்கு எது உகந்தமாக இருக்கிறதோ அந்தக் கலைகளைத்தான் அவர்கள் முன்னெடுத்துப் போவார்கள். நாட்டார் வழக்காற்றியல் துறையின் வளர்ச்சி, ஊடகத்துறைக்கு எதிரானது. சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் தேவையின் அளவில் மிகமிகச் சிறிய முயற்சிகள். இப்போதுதான் கூத்துப்பட்டறை போல தஞ்சாவூரில் பேராசிரியர் மு.ராமசாமி தலைமையில் ஒரு இடத்தை அமைக்க உள்ளார்கள். இதற்குக் கனிமொழி தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் பத்து பதினைந்து ஆண்டுகளில் தமிழ் கலாச்சார தலைநகரமாகத் திருச்சூரைப் போல தஞ்சாவூர் மாறுவதற்கு வாய்ப்புகள் உருவாகலாம்.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நீங்கள் பங்கெடுக்கிறீர்களா?

இல்லை. ஏனெனில் தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே கலந்துகொள்ளப் போவதில்லை. கலைஞர் கூப்பிட்டதினால் 

சிவத்தம்பி போகலாம்; நான் போகமாட்டேன். 

இன்று மக்களிடையே கோவில்களுக்குச் செல்லும் வழக்கம் அதிகரித்துள்ளது. புதிய பு தி ய ஆ ன் மீ க பி ன் ப ற் ற ல் க ளு ம் உருவாகியுள்ளன. நித்தியானந்த போன்ற சாமியார்களின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

98 முதல் 99 விழுக்காடு மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை உள்ளது. அதிலே தீங்கு ஒன்றுமே இல்லை. அவர்களின் ஆன்மிகத் தேவையை நிறைவேற்ற வேண்டிய சைவ வைணவ மடங்கள் தங்கள் கடமையிலிருந்து வழுவித் தங்கள் சொத்தைக் காப்பாற்றுவதில் குறிக்கோளுடன் மாறியதால்தான் இதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. அவர்களால் உருவான வெற்றிடத்தில் காஞ்சி மடம் போன்ற ஸ்மார்த்த நிறுவனங்கள் வந்தன. அதை சங்கராச்சாரியார் நிரப்பினார். இது ஒன்று.

இத்துடன் இதுபோன்ற புதிய பின்பற்றுதல்களுக்கு ஆளாகுபவர்கள் அதிகமும் நடுத்தர மேல் நடுத்தர வர்க்கத்தினர்தான். அதில் நிறைய பேர் பெண்கள். வயிற்றுக்குச் சோறு இல்லாத ஏழைக்கு இதில் பங்கே இல்லை. நித்தியானந்தா விவகாரம் போன்றவை எல்லாம் ஊடக வன்முறை, அவ்வளவே. காலம் காலமாகச் சாமியார்கள் இதைத்தான் செய்து வருகிறார்கள். அதை, பத்துப் பக்கத்தில் படம் போட்டு விற்பனை பண்ணுவதுதான் ஊடக வக்கிரம்.

ஊடகங்கள் நுகர்வு வெறியை உருவாக்குகின்றன. உடல் சார்ந்த நுகர்வு வெறியின் வெளிப்பாடுதான் நித்தியானந்தாவும் தேவநாதனும் . பாலுணர்வு இயற்கையானதுதான் ஊடகங்கள்தான் அதை வக்கிரமானதாக மாற்றுகின்றன.

நீங்கள் நாத்திகர் என்கிறீர்கள். ஆனால் உங்களது ஆராய்ச்சிகளோ பெரும்பாலும் கோயில்கள் சார்ந்தது? இது எப்படி?

எனக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை. அவைகளை வணங்குகிற மக்கள் மீது கவர்ச்சி இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் அழகை நான் ரசிக்கிறேன். 

கோவிலுக்குப் போகும் அனைவரும் தினசரி சிவபூசையோ விஷ்ணுபூசையோ செய்கிற மக்கள் அல்ல. கோயில் என்பதும் திருவிழா என்பதும் நிறுவனங்கள். திருவிழாக்களின்றி ஒரு சமூகம் இயங்க முடியாது. உங்களுக்கு நவராத்திரி ரஷ்யாவிலே அது மே தினக் கொண்டாட்டம். திருவிழாக்கள் ஒரு சமூகம் இளைப்பாறிச் செல்கிற இடமாக உள்ளது. 

அதுதான் கோயிலும்கூட. இந்த கோயில்கள் அதிகார மையமாக மாற்றப்பட்டபோது பெரியார் அதைக் கண்டனம் செய்தார். எந்தக் கோயிலுக்குப் போனாலும் நான் சாமி  

கும்பிடுவதில்லை. அன்றைக்குக்கூட பாண்டிச்சேரி போய்விட்டுத் திரும்பி வரும்போது சமயபுரம் போகவேண்டுமென்று எனது மனைவி கூறினார். ஆனால், கோயிலுக்குப் போனால் எனக்கு ஆராய்ச்சி உணர்வு வந்துவிடும். சமயபுரம் வந்தவுடன் மாலிகாபூர் கொள்ளையடித்துப் போகும்போது கண்ணனூரைக் கொள்ளையடித்துப் போகிறான். கண்ணனூர் என்று இஸ்லாமிய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஊர்தான் தற்போது சமயபுரம் என்றழைக்கப்படுகிறது. அங்கே ஒரு அரண்மனை உள்ளது.  சமயபுரம் கோயிலே சோழமாதேவியின் பள்ளிப்படை கோயில்தான் என்ற எண்ணம் உண்டு.சமயபுரம் அம்மனின் சிலை மிக அழகாக இருக்கும். ஒரு பெண் உயிருடன் அமர்ந்திருப்பது போன்ற தோற்றம்.

பெரியாரை ஜெயமோகன் போன்றவர்கள் மரபைப் பரிசீலிக்காமல் விரட்டி அடித்தவர் என்று கூறுகிறார்களே?

பெரியார் ஓர்மையுடன் செயல்பட்டவர். அவர் அதிகார மையங்களையும் பெருங்கதையாடல்களையும்தான் எதிர்த்தார். அவர் நாட்டார் நம்பிக்கைகள் மற்றும் கதைகளை எதிர்க்கவே இல்லை. நாட்டார் தெய்வங்களைப் பற்றி அவர் பேசவேயில்லை. உயிர்ப்பலி தடைச்சட்டம் வந்தபோது நான் கூறினேன், பெரியார் இருந்திருந்தால் அச்சட்டத்தை எதிர்த்திருப்பார். ‘அவன் சாமிய அவன் கும்பிடறான். அவன் சாமிக்கு அவன் வெட்டறான். சாமியா திங்குது. பத்து நிமிஷத்துக்குப் பிறகு மனிதன்தானே சாப்பிடுகிறான்’ என்று சொல்லியிருப்பார் என்று நான் சொன்னேன். ஆனால் வீரமணி அச்சட்டத்தை ஆதரித்தார்.

கோயில் நுழைவுப் போராட்டங்களுக்குப் பெரியார் ராமானுஜரை மாதிரியாக எடுத்துக் கொண்டாரா?

எடுக்கவில்லை. ஏனெனில், ராமானுஜர், கோயில் என்னும் ஆன்மீக நிறுவனத்தைக் காப்பாற்றும் முயற்சியிலேயே ஈடுபட்டவர். இதுபோல ராமானுஜரை பற்றிய ஆய்வுகள் அப்போது பெரிய அளவில் இல்லை. ஆனால் ராமானுஜர் மேல் பெரியாருக்கு மரியாதை இருந்தது. இப்போது திராவிடம் என்ற கருத்தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. வாக்கு வங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறையை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது.

திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளம் கொண்டது. அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது. நான்கு தென் மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமை நிலவுகிறது. மூன்று பொதுக்கூறுகளைக் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். தாய்மாமனுக்கான மரியாதை என்பது இந்த நான்கு மொழிக்காரர்களுக்கிடையே இன்றும் தொடர்கிறது. இரண்டாவது தாய்த் தெய்வ வழிபாடு. மூன்று இறந்த உடலுக்கான ம ரியாதை எ ன் ப து , நான்கு மொழிக்காரர்களிடமும் இருக்கிறது. இன்றைக்கும் பிராமணர்கள் சடலத்துக்கு ம ரியாதை கொடுப்பதில்லை. பி மணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இன்னும் நீடித்திருக்கும் வித்தியாசங்கள் உள்ளன். பிராமணர்கள் இன்றும் கருப்பட்டி காப்பி சாப்பிடுவதில்லை. ஏனெனில் கீ ழ்ச்சாதியினராகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால் அவர்கள் அதை விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ் கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும், பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் அதை அவர்கள் தொடுவதில்லை. ஆம்லேட் சாப்பிடுகிறவர்கள், உருளைக் கி ழ ங் கு சாப்பிட ஆரம்பித்துவிட்டனர் . ஏனெனில் அவையெல்லாம் துரைமார் கொண்டு வந்த பொருட்கள். சங்கீத சீசனை டிசம்பரில் வைப்பது அவர்களது கண்டுபிடிப்புதானே. ஏன் தொண்டைக் கட்டற டிசம்பரில் சங்கீத சீசன் வருகிறது. கோடையில்தானே வைக்க வேண்டும்? வெள்ளைக்காரர்களை மகிழ்விக்க அவர்களுக்கு உகந்த டிசம்பரில் சங்கீதக் கச்சேரிகளை வைத்தார்கள். அவர்களுடைய கிறிஸ்துமஸ் விடுமுறையில் மகிழ்விக்கத்தானே இந்த ஏற்பாடு.

தான் சாப்பிடுவதை அடுத்தவர்கள் பார்க்கக்கூடாதென்று தலை வாசல் கதவை சாத்திவைத்து சாப்பிடுவது பிராமணர்கள் தானே. அவர்களின் சாமிக்குக் கூட திரையை மூடித்தானே தளிகை வைக்கிறார்கள். ஆனால் சுடலைமாடனுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்டை அறுத்துப் போட்டிருப்பார்கள். அதை எல்லாரும் பார்க்கலாம். அதனால் பல வழக்கங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பெரியார் சொன்னது தமிழ் தேசியர்களைக் கோபத்துக்குள்ளாக்குகிறதே?

பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடுகளை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால், தமிழ் எழுத்துச் 

சீர்திருத்ததை பெரியார்தானே செய்தார். வேறு எந்தத் தமிழறிஞரும் முன்வரவில்லையே. மறைமலை அடிகளோ, தெ.பொ.மீயோ, மு.ராகவைய்யங்காரோ செய்யவில்லையே. காட்டுமிராண்டி பாஷையைத் திருத்துவதற்கு அவர் முயற்சி எடுத்தவர் இல்லையா? உரைநடை என்பது மணிக்கொடியால் தான் வளர்ந்தது என்று வேத வசனம் மாதிரி சொல்கின்றனர். ஆனால் 1925இல் பெரியாரின் தலையங்கங்களைப் பார்க்க வேண்டும். பெரியாரின் உரைநடை அத்தனை அற்புதமாக இருக்கிறது. பாரதியைக் கூட விட்டு விடுகிறார்கள். இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தைத் தக்க வைக்கிற முயற்சிகள் தான். கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் ஆட்சி செய்ய முடியுது...? தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வாக்களித்தது இங்குள்ள தமிழன் தானே. அவன் ஒரு குறுகிய எண்ணத்துக்குள் அடைபட்டவன் அல்ல என்பதைத் தானே காட்டுகிறது. இந்தியாவிலேயே அரசியல் தலைவர்கள் சாதிப் பட்டம் போடாமல் இருக்கிறது தமிழ்நாட்டில் மட்டும்தானே. கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோரின் சாதி யாருக்காவது டெல்லியில் தெரியுமா? ஆனால் வட இந்தியாவில் பார்த்தீர்கள் எனில் குப்தாக்கள், சர்மாக்கள் என எல்லாரும் சாதிப்பெயர் கொண்டவர்கள் தானே. கேரளாவில் கூட நம்பூதிரி, மேனன் எல்லாம் இருக்கிறார்களே. அந்த வகையில் சாதிப்பட்டத்தைத் துறந்தவன் தமிழன் தானே. இது பெரியாரின் வெற்றி அல்லவா. யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் தெலுங்கனும், மலையாளியும் கேளிர்தான் என்று வாழ்பவன் தமிழன். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் தமிழனுக்கு விசுவாசமாக இருக்கிறாரா என்றுதான் பார்க்க வேண்டும் என்று பெரியார் தெளிவாகச் சொல்கிறார். காவிரி விசயத்தில் 

ஜெயலலிதா தமிழகத்தை விட்டுக்கொடுக்கமாட்டார் அல்லவா? அப்புறம் என்ன, தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துப்போவதில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வைகோ தெலுங்கர்தானே. அவரைத் தமிழர் இல்லையென்று சொன்னால் தமிழன் ஒத்துக்கொள்வார்களா?

திராவிடம் என்கிற கருத்தாக்கம் இன்னும் வலுவானது என்று நினைக்கிறீர்களா?

வலுவாக இருக்கிறது என்று கருதவில்லை. அர்த்தமுடையதாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பம் என்று சொன்னதன் மீதான விமர்சனம் பற்றி...

அவர் இன்னொன்றையும் சொன்னார். அது தமிழ்த் தேசியர்களுக்கு உவக்காத விசயம். பறையர்களை தனது முதல் பதிப்பில் தூய தமிழ்ச்சாதி’ என்று எழுதியிருந்தார். அதற்கடுத்த பதிப்பில் அந்தப் பகுதி அகற்றப்பட்டுவிட்டது. அந்தப் பகுதியோடு சேர்த்து தற்போது ஒரு பதிப்பு கவிதாசரண் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் கால்டுவெல் இனவரையவியலாளர்தானே தவிர அரசியல்வாதி அல்ல. அவர் வரலாற்றாய்வாளரும்கூட. அவருடைய கருத்துகளை எடுத்துக் கொள்வதும் மறுப்பதும் இவர்களது நேர்மை சார்ந்தது.

ராமதாஸ் சொல்லும் அதே கருத்துக்களின் போக்கிலேயே விரக்தியான மனநிலையில் தலித்துகளும் சொல்கிறார்கள். திராவிட அரசியல் ஏமாற்றி விட்டது என்ற விமர்சனத்தை வைக்கிறார்கள். ஆனால் அம்பேத்கரின் எழுத்துக்களை முதலில் மொழிபெயர்த்து இங்கே 1935ஆம் ஆண்டிலேயே அவரை அறிமுகப்படுத்தியவர் 

பெரியார் திராவிட இயக்கத் தலைமைகள் பின்பு இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பை நம்பி நாசமாகப் போனது. குறிப்பாக அந்தத் தேர்வுக்குத் தொண்டர்கள் அல்ல காரணம்; தலைமைதான் காரணம்.

Comments