Skip to main content

பொம்மை தொழிற்சாலை - சார்லஸ் சிமிக்


என் அம்மா இங்கே வேலைசெய்கிறாள்

எனது அப்பாவும் இங்கேதான் பணியாற்றுகிறார்.


இது இரவுப்பணி.

பாகங்களை இணைக்கும் வரிசையில்

பொம்மைகளின் சுருள்வில்லை

பரிசோதிக்க

அவர்கள்

சாவிகொடுக்கின்றனர்.

 

துப்பாக்கி வீரர் படையில்

ஏழு பொம்மை உறுப்பினர்கள்

தங்கள் ரைஃபிள்களை நிமிர்த்தி

சுட்டு

அவசரமாய் கீழே இறக்குகின்றனர்.

 

கீழே விழுந்த நபர்

எழுகிறார்

மீண்டும்

விழுந்து எழுகிறார்.

அவரது கண்கட்டு

வெறுமனே வண்ணம்தீற்றியது.

 

இடுகாட்டுக் குழியை வெட்டுபவர்கள்

சரியாக வேலை செய்யவில்லை.

அவர்களது மண்வெட்டிகள்

கனக்கின்றன,

மிக அதீதமான கனம்.

 

அப்படித்தானே

அது இருக்கவும் இயலும்?

Comments

Gorky noel said…
அப்படித்தானே

அது இருக்கவும் இயலும்